கடும் முயற்சி பண்ணுவதை விட இப்படியே பண்ணினாலே போதும்' என நடிகர்
சிவகார்த்திக்கேயனுக்கு நடிகர் அஜீத் அறிவுரை கூறியுள்ளாராம். 'காக்கி
சட்டை' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில்
இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது 'ரஜினி முருகன்' என்ற
படத்தில் நடித்து வரும் அவர், புதிய படங்களுக்கான கதைகளைக் கேட்டு
வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது,
அஜித் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
சிவகார்த்திகேயன். அதில் அவர், ‘நீங்க நல்லா பண்ணிட்டு இருக்கீங்க.
வாழ்த்துகள்" என அஜீத் வாழ்த்தியதாக கூறியிருக்கிறார். மேலும், "கடும்
முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார்" என தான் கூறியதற்கு, ‘அதெல்லாம்
பண்ணாதீங்க. இப்படியே பண்ணுங்க.. நல்லா வருவீங்க' என அஜீத் அறிவுரை
சொன்னதாக தெரிவித்துள்ளார். அஜித் தன் மீது அக்கறை கொண்டு சொன்ன
அறிவுரையால் நெகிழ்ந்து போயுள்ளாராம் சிவகார்த்திகேயன்.
Saturday, 14 March 2015
கவர்ச்சியான நடிகர் வாக்கெடுப்பில் பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய அஜித்
இந்தியாவில் கவர்ச்சியான் நடிகர்கள் குறித்த வாக்கெடுப்பு ஒன்றை
பாலிவுட் லைப் என்ற இணையதளம் நடத்தியது. இதில் பாலிவுட் நடிகர்கள்
அமீர்கான்,அக்ஷய் குமார்,ஆகியோரை பின்னுக்கு தள்ளி அஅதிக ஓட்டுகளை அஜித்
பெற்று உள்ளார்.
வாக்கெடுப்பு பட்டியலில் அமீர்கான், அக்ஷய்குமார், மிலந்த் சோமன்,ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர் இதில் தமிழ் நடிகர் அஜித் குமாரும் இடம் பெற்று இருந்தார் அவர் அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பாலிவுட் லைப் வாசகர்கள் அஜித்துக்கு 79.5 சதவீத ஓட்டு அளித்து உள்ளனர்.அடுத்து அக்ஷய் குமாருக்கு 13.77 சதவீத ஓட்டுகளும், ஜார்ஜ் குளோனிக்கு 3.7 சதவீத ஓட்டுகளும், அமீர் கானுக்கு 1.92 ஓட்டுகளும் மிலந்த் சோமனுக்கு 0.85 ஓட்டுகளும் கிடைத்து உள்ளது.
சால்ட் பெப்பர் ஸ்டைலில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி இருப்பார் எனப்து குறிப்பிட தக்கது. மங்காத்தாவில் இந்த ஸ்டைலில் தான் முதன் முதலாக நடிகர் அஜித் தோன்றினார் அது சிறப்பாக பேசபட்டது.இதேபோல் சால்ட் பெப்பர் ஸ்டைலில் பிரதர்ஸ் படத்தில் நடிகர் அக்ஷய் குமார் தோன்றினார்.
இதே சால்ட் பெப்பர் ஸ்டைலில் தான் அமீர்கான் தனது அடுத்த ’டாங்கள்’ படத்தில் தோன்ற உள்ளார்.

Subscribe to:
Posts (Atom)