Saturday, 14 March 2015

அப்படி பண்ணாதீங்க... இப்படியே பண்ணுங்க... நல்லா வருவீங்க: 'சிவா' வுக்கு 'தல' அட்வைஸ்!

கடும் முயற்சி பண்ணுவதை விட இப்படியே பண்ணினாலே போதும்' என நடிகர் சிவகார்த்திக்கேயனுக்கு நடிகர் அஜீத் அறிவுரை கூறியுள்ளாராம். 'காக்கி சட்டை' படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது 'ரஜினி முருகன்' என்ற படத்தில் நடித்து வரும் அவர், புதிய படங்களுக்கான கதைகளைக் கேட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது, அஜித் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில் அவர், ‘நீங்க நல்லா பண்ணிட்டு இருக்கீங்க. வாழ்த்துகள்" என அஜீத் வாழ்த்தியதாக கூறியிருக்கிறார். மேலும், "கடும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் சார்" என தான் கூறியதற்கு, ‘அதெல்லாம் பண்ணாதீங்க. இப்படியே பண்ணுங்க.. நல்லா வருவீங்க' என அஜீத் அறிவுரை சொன்னதாக தெரிவித்துள்ளார். அஜித் தன் மீது அக்கறை கொண்டு சொன்ன அறிவுரையால் நெகிழ்ந்து போயுள்ளாராம் சிவகார்த்திகேயன்.

கவர்ச்சியான நடிகர் வாக்கெடுப்பில் பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளிய அஜித்

இந்தியாவில் கவர்ச்சியான் நடிகர்கள் குறித்த வாக்கெடுப்பு ஒன்றை பாலிவுட் லைப் என்ற இணையதளம் நடத்தியது. இதில் பாலிவுட் நடிகர்கள் அமீர்கான்,அக்‌ஷய் குமார்,ஆகியோரை பின்னுக்கு தள்ளி அஅதிக ஓட்டுகளை அஜித் பெற்று உள்ளார்.

வாக்கெடுப்பு பட்டியலில் அமீர்கான், அக்‌ஷய்குமார், மிலந்த் சோமன்,ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர் இதில் தமிழ் நடிகர் அஜித் குமாரும் இடம் பெற்று இருந்தார் அவர் அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

பாலிவுட் லைப் வாசகர்கள் அஜித்துக்கு 79.5 சதவீத ஓட்டு அளித்து உள்ளனர்.அடுத்து அக்‌ஷய் குமாருக்கு 13.77 சதவீத ஓட்டுகளும், ஜார்ஜ் குளோனிக்கு 3.7 சதவீத ஓட்டுகளும், அமீர் கானுக்கு 1.92 ஓட்டுகளும் மிலந்த் சோமனுக்கு 0.85 ஓட்டுகளும் கிடைத்து உள்ளது.

சால்ட் பெப்பர் ஸ்டைலில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி இருப்பார் எனப்து குறிப்பிட தக்கது. மங்காத்தாவில் இந்த ஸ்டைலில் தான் முதன் முதலாக நடிகர் அஜித் தோன்றினார் அது சிறப்பாக பேசபட்டது.இதேபோல் சால்ட் பெப்பர் ஸ்டைலில் பிரதர்ஸ் படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் தோன்றினார்.

இதே சால்ட் பெப்பர் ஸ்டைலில் தான் அமீர்கான் தனது அடுத்த ’டாங்கள்’ படத்தில் தோன்ற உள்ளார்.

Saturday, 7 February 2015

Yennai Arindhaal takes the No.1 slot by a big margin

Yennai Arindhaal takes the No.1 slot by a big margin

Feb 08, 2015
On February 5, we had a poll in our official verified Behindwoods FB page asking fans to vote for their favorite film among the three recent biggies - Yennai Arindhaal, I and Kaththi. The response to this thread was incredible and as said earlier, we are publishing the results now.
 
LIKES were considered as votes and the results are as follows
 
Yennai Arindhaal - 9827 likes
Kaththi - 6159 likes
I - 2870 likes

அஜீத் என்ற ஒருவருக்காக மட்டும் தனிப்பட்ட கொண்டாட்டம்


கடந்த சில தினங்களாகவே உலகத்
தமிழர்கள் மட்டுமல்ல, உள்ளூர்
தமிழர்களிடமும் அஜீத்
திருவிழா களைகட்டியிருக்கிறது.
அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’
பற்றிய விமர்சனங்கள்தான்
எல்லா சமூக வலை தளங்களிலும்.
அப்படியிருந்திருக்கலாம்…
இப்படியிருந்திருக்கலாம்… ஆஹா…
பிரமாதம்… ம்ஹூம்… சேச்சே…
என்றெல்லாம் அவரவர் ரசனைக்கேற்ப
விமர்சித்துக் கொண்டிருந்தாலும்
அஜீத் என்ற ஒருவருக்காக மட்டும்
தனிப்பட்ட கொண்டாட்டம்
ஆக்கிவிட்டார்கள் இந்த ரிலீசை!
எல்லாவற்றுக்கும் சிகரம்
வைத்தது போல நடந்தது அந்த
கலாட்டா. வள்ளூவர் கோட்டம்
அருகில் அமைந்திருக்கும் ஃபோர்
பிரேம்ஸ் திரையரங்கத்தில்
‘என்னை அறிந்தால்’ ஸ்பெஷல்
ஷோ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந
்தது.
சில விஐபிகளுக்காக மட்டும்
திரையிடப்பட்ட அந்த படம்
முடிந்து சில நிமிடத்திற்குள் அந்த
ஏரியாவுக்கு எப்படியோ ஒரு தகவல்
பரவியது. வேறொன்றுமில்லை…
அஜீத் தியேட்டருக்கு வந்திருக்கிறார்
என்பதுதான் அது.
மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர்
கூடிவிட்டார்கள் திரையரங்க
வாசலில். ‘தலய வெளியில
வரச்சொல்லு…நாங்க
பார்த்துட்டு கிளம்புறோம்’
என்று பெரும் கூச்சல் வேறு. ‘இல்ல…
இங்க அஜீத் வரல… நீங்கள்லாம்
கலைஞ்சு போகலாம்’
என்று தியேட்டர் நிர்வாகத்தினர்
கெஞ்சியும் கூட யாரும் நகர்வதாக
இல்லை. அப்படியே சாலையில்
அமர்ந்துவிட்டார்கள்.
‘அவரை வெளியில் வரச்சொல்லுங்க.
இல்லேன்னா அவர் வர்ற வரைக்கும்
இந்த
இடத்தை விட்டு நகர்றதா இல்ல…’
என்று கூறிவிட்டு கல் போல
அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள்.
நேரம் சென்று கொண்டேயிருந்தது.
நள்ளிரவு பனிரெண்டு மணியாகிவிட்டது.
ம்ஹூம்… இந்த கூட்டம்
கலையாது என்று முடிவெடுத்த
தியேட்டர் நிர்வாகி கல்யாணம்
அஜீத்தின் மேனேஜர் சுரேஷ்
சந்திராவுக்கு தகவல் கொடுத்தார்.
அதற்கப்புறம் கிளம்பி ஓடோடி வந்த
சுரேஷ், ‘அஜீத் சார்… இங்க இல்ல.
நம்புலேன்னா யாராவது ஒருவர் என்
பின்னாடி வாங்க. தியேட்டர் முழுக்க
தேடி பார்த்துட்டு கிளம்புங்க’
என்றார். அதற்கப்புறம்
அரை மனசோடு கிளம்பி போனது கூட்டம்.
இதே தியேட்டருக்கு ரஜினி, விஜய்,
தனுஷ், உள்ளிட்ட
பல்வேறு நட்சத்திரங்கள்
வந்திருக்கிறார்கள். படம்
பார்த்திருக்கிறார்கள். ஆனால்
அப்போதெல்லாம் இப்படி ஜனங்க
கூடல. இப்ப மட்டும் எப்படி?
என்று அக்கம்
பக்கத்து பங்களாக்காரர்கள்
அங்கலாய்த்ததுதான் ஆச்சர்யம் —

Friday, 6 February 2015

தமிழ்நாட்டில் 12.80 கோடியும்: உலகம் முழுவதும் இப்படம் சுமார் 30.20 கோடி வசூல்

அஜித்-கெளதம் மேனன் கூட்டணி முதல் முறையாக இணைந்து உருவாகியுள்ள படம் 'என்னை அறிந்தால்' எனவே இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. நேற்று இப்படம் ரிலீசாகி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. தல ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள் பலரும் என்னை அறிந்தால் படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர். தற்போது இப்படத்தின் உலகம் முழுவதுமான முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 12.80 கோடியும், கேரளாவும் 3.75 கோடியும், கர்நாடகாவில் 2.54 கோடியும், இந்திய மற்ற இடங்களில் 1.36 கோடியும், வெளிநாடுகளில் 9.75 கோடியும் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் இப்படம் சுமார் 30.20 கோடி வசூல் செய்திருக்கிறதாம். இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'லிங்கா' படம் முதல் நாள் வசூல் 37 கோடியும், விக்ரமின் 'ஐ' படம் 27 கோடியும், விஜய்யின் 'கத்தி' படம் 23 கோடியும் தோராயமாக
வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது