கடந்த சில தினங்களாகவே உலகத்
தமிழர்கள் மட்டுமல்ல, உள்ளூர்
தமிழர்களிடமும் அஜீத்
திருவிழா களைகட்டியிருக்கிறது.
அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’
பற்றிய விமர்சனங்கள்தான்
எல்லா சமூக வலை தளங்களிலும்.
அப்படியிருந்திருக்கலாம்…
இப்படியிருந்திருக்கலாம்… ஆஹா…
பிரமாதம்… ம்ஹூம்… சேச்சே…
என்றெல்லாம் அவரவர் ரசனைக்கேற்ப
விமர்சித்துக் கொண்டிருந்தாலும்
அஜீத் என்ற ஒருவருக்காக மட்டும்
தனிப்பட்ட கொண்டாட்டம்
ஆக்கிவிட்டார்கள் இந்த ரிலீசை!
எல்லாவற்றுக்கும் சிகரம்
வைத்தது போல நடந்தது அந்த
கலாட்டா. வள்ளூவர் கோட்டம்
அருகில் அமைந்திருக்கும் ஃபோர்
பிரேம்ஸ் திரையரங்கத்தில்
‘என்னை அறிந்தால்’ ஸ்பெஷல்
ஷோ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந
்தது.
சில விஐபிகளுக்காக மட்டும்
திரையிடப்பட்ட அந்த படம்
முடிந்து சில நிமிடத்திற்குள் அந்த
ஏரியாவுக்கு எப்படியோ ஒரு தகவல்
பரவியது. வேறொன்றுமில்லை…
அஜீத் தியேட்டருக்கு வந்திருக்கிறார்
என்பதுதான் அது.
மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர்
கூடிவிட்டார்கள் திரையரங்க
வாசலில். ‘தலய வெளியில
வரச்சொல்லு…நாங்க
பார்த்துட்டு கிளம்புறோம்’
என்று பெரும் கூச்சல் வேறு. ‘இல்ல…
இங்க அஜீத் வரல… நீங்கள்லாம்
கலைஞ்சு போகலாம்’
என்று தியேட்டர் நிர்வாகத்தினர்
கெஞ்சியும் கூட யாரும் நகர்வதாக
இல்லை. அப்படியே சாலையில்
அமர்ந்துவிட்டார்கள்.
‘அவரை வெளியில் வரச்சொல்லுங்க.
இல்லேன்னா அவர் வர்ற வரைக்கும்
இந்த
இடத்தை விட்டு நகர்றதா இல்ல…’
என்று கூறிவிட்டு கல் போல
அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள்.
நேரம் சென்று கொண்டேயிருந்தது.
நள்ளிரவு பனிரெண்டு மணியாகிவிட்டது.
ம்ஹூம்… இந்த கூட்டம்
கலையாது என்று முடிவெடுத்த
தியேட்டர் நிர்வாகி கல்யாணம்
அஜீத்தின் மேனேஜர் சுரேஷ்
சந்திராவுக்கு தகவல் கொடுத்தார்.
அதற்கப்புறம் கிளம்பி ஓடோடி வந்த
சுரேஷ், ‘அஜீத் சார்… இங்க இல்ல.
நம்புலேன்னா யாராவது ஒருவர் என்
பின்னாடி வாங்க. தியேட்டர் முழுக்க
தேடி பார்த்துட்டு கிளம்புங்க’
என்றார். அதற்கப்புறம்
அரை மனசோடு கிளம்பி போனது கூட்டம்.
இதே தியேட்டருக்கு ரஜினி, விஜய்,
தனுஷ், உள்ளிட்ட
பல்வேறு நட்சத்திரங்கள்
வந்திருக்கிறார்கள். படம்
பார்த்திருக்கிறார்கள். ஆனால்
அப்போதெல்லாம் இப்படி ஜனங்க
கூடல. இப்ப மட்டும் எப்படி?
என்று அக்கம்
பக்கத்து பங்களாக்காரர்கள்
அங்கலாய்த்ததுதான் ஆச்சர்யம் —

No comments:
Post a Comment